ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு திரைப்படம் அருவி

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு திரைப்படம் அருவி

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ அருவி “ . இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே. எஸ். ரவி குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சொசியோ – பொலிடிகல் படமாக உள்ள இத்திரைப்படத்தின் கதாநாயகிகான தேர்வு மட்டும் 8 மாதம் நடந்துள்ளது. தேர்வில் கலந்து கொண்ட 500க்கும் மேற்ப்பட்டோரிலிருந்து தேர்வுசெய்யப்பட்டவர் தான் நாயகி அதீதி பாலன். இப்படத்தில் அதீதி பாலன் “ அருவி “ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்பு தான் இப்படத்தின் கதைக்களம். ஒரு கோணத்தில் இருந்த பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் பையோ- கிராபி போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் , அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை , அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்த பேசும் ஒரு கதையாக இருக்கும். மேலும் இப்படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஹைதராபாதை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் , அஞ்சலி வரதன் என்ற திருநங்கை , லட்சுமி கோபால் சாமி என்ற கன்னட நடிகை , மதன் என 20க்கும் மேற்ப்பட்டர்வர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் , மும்பை இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் , நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் கேரளா , தி ஹபிடேட் பிலிம் பெஸ்டிவல் டெல்லி , தி பயோஸ்கோப் குளோபல் பிலிம் பெஸ்டிவல் பஞ்சாப் என பல்வேறு பிலிம் பெஸ்டிவல்களில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எழுத்து இயக்கம் – அருண் பிரபு புரஷோதமன் ஒளிப்பதிவு – ஷெல்லி கலிஸ்ட் இசை – பிந்து மேனன் , வேதாந்த பரத்வாஜ் தயாரிப்பு – எஸ்.ஆர். பிரபு , எஸ் . ஆர். பிரகாஷ் பாபு