சிம்புவுக்கு பெண் பார்த்தாச்சு, விரைவில் டும் டும் டும்

சிம்பு விரைவில் திருமணம் செய்துக் கொள்வார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இப்போது அதை மெய்ப்பிக்கும் விதமாக, அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட கூல் சுரேஷ், சிம்புவுக்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

கூல் சுரேஷ் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர‌து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர், டி ராஜேந்தர் நடத்தி வரும் லட்சிய திமுக‌ கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.

அந்த நிமிடம் என்ற‌ பட விழாவில் கலந்துக் கொண்ட சுரேஷ், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? எப்போது கல்யாணம் என்று எனக்குத் தெரியும். யாரும் டி ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினார்.

இதனால் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் சிம்புவின் வருங்கால மனைவி யாரென்று ஆராய்ச்சி கிளம்பியுள்ளது. சென்னை விஷன் விரைவில் அந்த தகவல்களை வெளியிடும்.

சிம்புவின் தம்பி குறளரசன் திருமணம் ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் நடந்த நிலையில், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திராவும் தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார்.

சமீபத்தில், சிம்புவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், ‘தன்னுடைய பழைய காதல் விவாகரங்களால் காயமடைந்த சிம்பு, தற்போது ஆன்மிகத்திலும், படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு ஏற்ற பெண் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வார்,’ எனக் கூறினர்.

அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி குறளரசனிடம் கேட்டதற்கு, ஒரு புன்னகயுடன், “எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது,” என்றார்.