குறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது?

ஆரம்பத்தில் இருந்தே குறளரசனின் காதல் பற்றியும், மதமாற்றம் பற்றியும், திருமணம் பற்றியும் சரியாக எழுதி வந்தது சென்னை விஷன் மட்டுமே. இப்போது நாம் கொடுத்த செய்திகளை மெய்ப்பித்து இருக்கிறது டி ஆர் குடும்பம்.

தனது இளைய மகனின் திருமணத்திற்கு விஜயகாந்தை அழைத்த கையோடு, ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் டி ராஜேந்தர். குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

மணப்பெண்ணின் பெயர் நபீலா ஆர் அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத். இவர்களின் திருமண வரவேற்பு, வரும் 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்காக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்து வர்றார் டி ராஜேந்தர். முஸ்லீம் மதத்துக்கு மாறியிருந்தாலும் குறளரசன் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லைன்னு இப்போதைக்குத் தகவல்.

இதற்கிடையே, தம்பி, தங்கை திருமணத்திற்கு பின்பும் முரட்டு சிங்கிளாகவே இருக்கப் போகிறார் சிம்பு. ஏனென்று விசாரித்த போது, அவரது நெருக்கமான வட்டாரங்கள், ‘தன்னுடைய பழைய காதல் விவாகரங்களால் காயமடைந்த சிம்பு, தற்போது ஆன்மிகத்திலும், படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு ஏற்ற பெண் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வார்,’ என்கின்றனர்.

அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி குறளரசனிடம் கேட்டதற்கு, ஒரு புன்னகயுடன், “எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது,” என்றார்.

குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகினார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். சிலம்பரசனின் சகோதரி இலக்கியாவுக்கும் திருமணமாகிவிட்டது.

குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதைப் பற்றி பேசிய‌ அவருடைய தந்தை ராஜேந்தர், “எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கடைபிடிப்பவன் நான். அதனால் குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாத்தை தழுவ தடை சொல்லவில்லை” என்றார்.