காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்ட அறிக்கை தாக்கல்!

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளார் யு.பி.சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் வரைவு திட்டத்தில், காவி மேலாண்மையை வாரியமாகவோ, கமிஷனாகவோ அமைக்கலாம் என்றும் அக்குழுவில் 10 பேர் வரை உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையை மே 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

குழுவின் தலைவார் 5 ஆண்டுகள் தலைமை வகிப்பார். 5 ஆண்டுகாலம் அல்லது 65 வயது இவற்றில் ஒன்று பதவிகாலமாக கருதப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார் .