காமிராமேனோட நிக்கி கல்ராணி நட்பா?

தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த நிக்கி கல்ராணியையும் கிசுகிசுக்கள் விட்டு வைக்கலை. தான் அழகா திரையில் தெரிவதற்காக காமிராமேன்களோட அவர் நெருக்கம் பாராட்டுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதை மறுத்துள்ளார்.

“எனக்கும் கேமரா மேனுக்கும் லின்க் எல்லாம் ஒன்றும் இல்லை. நான் என் வேலையை பார்த்தேன். அவர், அவர் வேலையை பார்த்தார். திரையில் பார்க்கும் போது காட்சிகள் அழகாக இருக்கும்,” என்று அவர் பதிலளித்துள்ளார்.

சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது கீ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்தவர் என பெயர் எடுத்த நடிகை நிக்கி கல்ராணி, இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ஏன் இந்த ஓய்வு? என்ற கேள்விக்கு, நேரம் காலம் இல்லாமல் உழைத்ததால், ஓய்வு எடுக்க பெற்றோர் அறிவுறுத்தியதால், படங்களை குறைத்ததாக நிக்கி கல்ராணி விளக்கம் அளித்தார். இருந்தபோதிலும், தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

“கடந்த இரண்டு வருடங்களில் நிறைய படங்களில் நடித்த ஒரே நடிகை நான்தான்.ஓய்வில்லாமல் நடித்ததாலோ என்னவோ, திடீரென்று உடல்நிலை பாதித்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் என்னை திட்டினார்கள். முதலில் ரெஸ்ட் எடு, பிறகு நடிப்பை பார்த்துக் கொள்ளலாம் என்று எனது பெற்றோர் சொன்னார்கள்.

அதன்படி ஓய்வு எடுத்தேன். இப்போது கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளேன். செலக்ட்டிவ்வாக படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். தற்போது நான்கு படங்களில் மட்டும் நடித்து வருகிறேன்,” என்றார்.