காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

நியூஸ் 7 தமிழ் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி பகல் 1:00மணிக்கு ஒளிபரப்பாகும் இதில் தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் தலைவர்களா..? மக்களா..? என்பது தலைப்பு.

மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற கலகலப்பும் நையாண்டியுமான சிந்திக்க வைக்கும் நகைச்சுவை பட்டிமன்றம் இது. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்கிறது பாரதநாட்டின் பாரம்பரியம். அதேசமயம் முன்னேறிய நாடுகளில் உள்ள மக்கள், நல்லொழுக்கம் உள்ளவரை மட்டுமே தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியானால் சுபிட்சமான நாடு வேண்டுமென்றால் யார் பொறுப்பாளி.. மக்களா..? தலைவர்களா..? நடிகை கஸ்தூரி,RJ விஜய், RJ மிருதுளா போன்றவர்கள் தைரியமாக பேசி மாணவர்களின் கைதட்டலை அள்ளியிருக்கின்றனர். நாம் தமிழர் சீமான், உலக நாடுகளின் தலைவர்களை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அனைவரும் பார்க்கவேண்டிய, காலத்திற்கேற்ற கருத்துள்ள பட்டிமன்றம் இது. இந்த சிறப்பு பட்டிமன்றம் அக்டோபர் 2-ஆம் தேதி பகல் 1:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பாக இரவு 9:00மணிக்கும் நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் குடும்பத்தோடு கண்டு களிக்கலாம் .