காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் விரைவு சேவை அறிமுகம்.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில். அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 

அத்திவரதரை தரிசிக்க விரைவு சேவை குறித்து காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அதிகாரி கூறியதாவது:-

இனி மேல் ‘டோனர் பாஸ்’ வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை விரைவு தரிசன சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இணையதளத்தில் ரூ.300 செலுத்தி அனுமதிசீட்டு பெற வேண்டும். இதன் மூலம் அத்திவரதரை விரைவில் தரிசிக்க முடியும்