கல்யாணம் பற்றி கேள்வி, கடுப்பாகிய ஓவியா

ஓவியா என்றாலே அதிரடி, அடாவடி தான். இதற்கு சமீபத்திய உதாரணம், ரசிகர்களுடன் ஆன்லைனில் அவர் நடத்திய உற்சாக‌ உரையாடல்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியா பதிலளிக்கையில், ஒருவ‌ர், “என்னை திருமணம் செய்துகொள்ள தயாரா?” என்று கேட்டார். இதற்கு ஓவியா பதில் அளிக்கும் முன்னரே மற்றொருவர் ஓவியாவை பற்றி மோசமாக விமர்சித்து ஒரு பதிவிட்டார்.

இதனால் கோபமான ஓவியா அந்த ரசிகரை பதிலுக்கு திட்டினார். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ட்விட்களை ரசிகர்கள் தூக்கிவிட்ட நிலையில், ஓவியா பதிவிட்டத்தற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன‌ர். பல பேர் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இது வைரல் ஆகி வருகிறது.

களவாணியில் அப்பாவி பெண்ணா மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா, பிக் பாஸில் போல்ட்னெஸ் காட்டி எல்லாரையும் கிளீன் போல்ட் ஆக்கினார். பிக் பாஸ் சகப்போட்டியாளர் ஆரவோட லிவிங் டுகெதரா வாழ்வதா கிசுகிசுக்கப்படும் ஓவியா, கல்யாணம் தனக்கு செட் ஆகாதுன்னு சமீபத்தில் ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்து இருந்தார்.

நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை, என்றார் அவர்.

90 எம் எல் திரைப்படத்தில் சர்ச்சையான காட்சிகளில் நடித்ததைப் பற்றி கேட்ட போது, “பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை.

படத்தில் வயது வந்தோருக்கான வி‌ஷயங்கள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கிறது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாக பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாக பாருங்கள்”, என்று தில்லாக சொன்னார்.