உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2020, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 07.10க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன்:     R. Arvind Kumar  S/O.  Mr. E. Rudramoorthy & Mrs. Jayalakshmi Rudramoorthy
மணமகள் :      Suja  D/O.  Mr. M.Subramani  & Mrs. S.Suseela