இயக்குனர் விஜய் மற்றும் பிரபுதேவா மீண்டும் கூட்டணி!

இயக்குனர் விஜய் மற்றும் பிரபுதேவா மீண்டும் கூட்டணி!

ஒரு வெற்றி பெற்ற கூட்டணி மறுபடியும் இணைவதில் ஆச்சிர்யமொன்றும் இல்லை. ஆனால் மறுபடியும் சேர வேண்டும் என்பதற்காக மட்டுமில்லாமல் ஒரு பிரமாதமான, வலுவான கதைக்காக சேருவதே இயக்குனர் விஜய்-பிரபுதேவா கூட்டணியின் சிறப்பு. ‘தேவி’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி தற்பொழுது ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளுக்கு சாம் CS இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்யவுள்ளார் . இந்த இயக்குனர் விஜய்- பிரபுதேவா கூட்டணியை சினிமா வணிகம் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தியில் ‘லவ் இன் டோக்யோ’, ‘ஜூகுனு’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹிந்தி சினிமா உலகின் ஜாம்பவான் ‘பிரமோத் பிலிம்ஸ்’ இப்படத்தை, சினிமா தயாரிப்பிலும் விநியோகத்தில் பல உயரங்களை தொட்டுள்ள ‘ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்’ திரு. ரவிச்சந்திரன் அவர்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். இந்த ஒட்டுமொத்த மகத்தான கூட்டணி நிச்சயம் ஒரு வெற்றி படத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.