இந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்

‘சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சணும் அப்பப்போ கெஞ்சணும்’. பேட்ட படத்தின் இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, விஷாலுக்கு ரொம்பவே பொருந்துது.

நடிகர் சங்க செயலாளர், தயராளிப்பாளர் சங்கத் தலைவர், முன்னணி கதாநாயகன்னு எப்போவும் பிசியாவே இருக்கிற விஷால், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால, வருங்கால மனைவி அனிஷா கூட டைம் ஸ்பென்ட் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.

அயோக்யா படப்பிடிப்பிலும், சினிமா பஞ்சாயத்து வேலைகளிலும் விஷால் பிசியாக இருப்பதால், அனுஷாவும் அவரை நல்லாவே புரிஞ்சி வெச்சி இருக்காராம். இருந்தாலும் இரண்டு பேருக்கும் நடுவுல அப்பப்போ ஊடல் வந்துடுதாம். அது சரி, ஊடல் தான காதலை பலப்படுத்தும்.

மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த அனிஷா, தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட்டான அர்ஜீன் ரெட்டி திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஷால் தனது டிவிட்டர் பதிவில், தான் விரைவில் அனிஷாவை திருமணம் செய்வது உறுதியாகியுள்ளதாகவும், இது தனது வாழ்வில் நிகழும் அடுத்த மாற்றம் எனவும் பதிவிட்டிருந்தார்.

ஹைதராபாத்தில் விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திராவில் பிரபலமான தொழிலதிபரின் மகள் அனிஷா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரது திருமணத் தேதி உள்ளிட்டவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஹைதராபாத்தில் நடைபெற்ற விஷாலின் திருமண நிச்சயதார்த்த விழாவில், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் விஷால் – அனிஷா ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்தது.

காதலர் தினத்தை தன்னுடைய வருங்கால மனைவியும், காதலியுமான அனிஷா உடன் கொண்டாடினார் விஷால். அப்போது வருங்கால காதல் மனைவிக்கு நெத்தியில் முத்தமிட்டவாறு எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன்னுடைய ஆழமான காதலை தெரிவித்தார்.

நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள விஷால், நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லியிருந்தால். அந்தக் கட்டடம் கட்டும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.