'அறம்' திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்

‘அறம்’ திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

ஒரு படத்தின் வெற்றிக்கும், மக்கள் மேல் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் அப்படத்திற்கு சென்சார் குழு என்ன சான்றிதழ் வழங்குகிறது என்பது ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கும். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கோபி நைனார் இயக்கத்தில் கொட்டப்படி J ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. சென்சார் குழுவின் தணிக்கைக்கு சென்ற இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு ‘அறம்’ பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ‘அறம்’ உருவாகியுள்ளது.