அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார்

பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக்இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். அர்விந்த் சாமியின் கதாபாத்திரத்திலும், அமலா பால் கதாபாத்திரத்திலும் மலையாள வெர்ஷனை போல் இல்லாமல் சிறு மாற்றங்களை செய்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
பாஸ்கர் ஒரு ரஸ்கல் படத்தின் ரீ- ரெக்கார்டிங்க் வேலைகள் தற்போது மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசையை நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் டிசம்பர் மாதத்தில் திரையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தயாரிப்பு : எம்.ஹர்சினி

இயக்கம்  : சித்திக்

இசை   : அம்ரேஷ்

ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்

எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்

புரொடக்ஷன் டிசைனர் :  மணி சுசித்ரா

Executive Producer  : விமல்.ஜி

ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்

சண்டை பயிற்சி:  பெப்சி விஜயன்

நடனம் : பிருந்தா