அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ‘கலைப்புலி’ எஸ். தாணு ஏகமனதாக தேர்வு  

பிரபல தயாரிப்பு நிறு வனமான கலைப்புலி இண்டர்நேஷனல், வி கிரியேஷன்ஸ் அதிபர் கலைப்புலி எஸ்.தாணு அகில இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட துறையில் 1971ல் விநியோகஸ்தரான கலைப்புலி தாணு. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுவர் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக சி. கல்யாண், சி.பி.விஜயகுமார், என்.எம். சுரேஷ், ஆனந்தா எல்.சுரேஷ், டி.பி.அகர்வால், செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்